பொள்ளாச்சி அருகே தொடர் கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில், வீடுகளுக்குள் பாம்பு, பூச்சி உள்ளிட்டவை நுழைவதால் உறக்கமின்றி அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
5 ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், தங்கள் பிரச்னையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.