தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலரின் வீடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராகவும், திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர் கனிமொழி. இவரது உறவினர் ஓட்டிச்சென்ற வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் இளம்பெண் ஒருவர் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடராமல் இருக்க தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த கனிமொழி, 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். ஆனால் கையில் காசு இல்லாததால் மருத்துவரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார். அப்போது, தன்னிடமும் பணம் இல்லை என மருத்துவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கனிமொழி அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கூறி அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.