கேரள கடற்பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்கு கப்பலில் இருந்த 35 கொள்கலன்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், கொச்சி கடற்பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்கு கப்பல் மற்றும் அதிலிருந்த 35 கொள்கலன்கள் கொல்லம் கடற்பகுதியில் கரை ஒதுங்கின. எண்ணெய் கசிவு ஏற்பட்டிருந்ததாலும், 13 கொள்கலன்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கால்சியம் கார்பனேடு வேதிப்பொருள் இருந்ததாலும் அவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதி முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.