தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
கும்பகோணத்தில் நடந்த பேரணியை மாவட்ட தலைவர் தங்க. கென்னடி தொடங்கி வைத்தார். கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து பாலக்கரை காமராஜ் சிலை வரை சென்ற பேரணியில் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.