அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்டின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டிஸ்னி லேண்டில் அடிக்கடி சர்வதேச கண்காட்சி, சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது 70-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
மேலும், ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டனர்.