டென்மார்க்கில் கார்னிவல் கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஸ்பெயின், பிரேசில், இத்தாலி, ஜமைக்கா போன்ற நாடுகளில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் வெகு விமரிசையாக இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, டென்மார்க்கின் ஆல்போர்க் நகரில் நடைபெற்ற இத்திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.