நடுவானில் ஒரே நேரத்தில் இரண்டு போர் விமானங்களுக்கு எரிபொருள்நிரப்பும் வீடியோவை ஆஸ்திரேலிய விமானப்படை வெளியிட்டுள்ளது.
1920-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராணுவத்திலிருந்து ஆஸ்திரேலிய விமானப் படையைப் பிரித்து, 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய விமானப்படையாக உருவாக்கப்பட்டது.
விமானப்படையை மேலும் வலுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், நடுவானில் ஒரே நேரத்தில் இரண்டு போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வீடியோ வெளியாகியுள்ளது.