பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், மனநல காப்பக உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வருண் காந்த் என்ற 22 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் ஏற்கனவே மனநல காப்பக பங்குதாரர் கிரிராம், பணியாளர்கள் நித்தீஷ், ரங்கநாயகி, சதீஷ் உள்ளிட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மனநல காப்பக உரியமையாளர் கவிதா, கவிதாவின் கணவர் லட்சுமணன், மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா, மற்றொரு பங்குதாரர் சாஜு ஆகிய 5 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் போலீசாரால் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த கவிதா உள்ளிட்ட 5 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.