ஞானசேகரன் வழக்கின் தீர்ப்புக்கு காவல்துறைதான் காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் கூறுவதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், ஞானசேகரன் வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க திமுக-வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கைத் துரிதப்படுத்தியதால் தான் 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் மனசாட்சியின்றி பச்சைப் பொய் கூறுவதாக விமர்சித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய திமுக அரசைத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
















