நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப்பாதையின் 30வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப் பாதையின் 30வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.