பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் உறுதிபட தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் உடனான எங்களது நிலைபாட்டில் தெளிவாக உள்ளதாக தெரிவித்தார்.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடைபெறாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகவும், இந்தியா சமர்ப்பித்துள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ள முக்கிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதி நீர் நிறுத்தி வைக்கப்படும் என்றும், பிரதமர் மோடி கூறியதை போல பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும், வர்த்தகமும், ரத்தமும், தண்ணீரும் ஒருபோதும் ஒன்றாக செல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.