பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத இயக்கத் தலைவனும், பாகிஸ்தான் அரசியல்வாதியும் மேடையில் ஒன்றாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி சைஃபுல்லா கசூரி. இவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்.
அதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழு பாதுகாப்பு அளித்தது. மேலும் பொதுக்கூட்ட மேடையில் பாகிஸ்தான் அரசியல்வாதி மாலிக் அகமதுவுடன் சைஃபுல்லா கசூரி இருப்பது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளை போராளிகள் என குறிப்பிட்டு சைஃபுல்லா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.