கார்ட்டூமை முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவித்ததை அடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர்.
ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்தது. இதனை நிறுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறிப்பாகத் துறைமுக நகரான போர்ட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது துணை ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில், கார்ட்டூமை முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர்.