தென்கொரிய அதிபர் தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், தென்கொரியாவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.