சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.