தென்கொரியா கடல் பரப்பின்மேல் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானம், தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த கோர விபத்தில், விமானத்திலிருந்த 4 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புத்துறை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். பின்னர், விமானத்தின் கருப்பு பெட்டியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.