ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நமது கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோவாவில் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
அப்போது, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி அவரை வரவேற்றார். பின்னர், கடற்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் கடல்சார் சக்தியான ஐஎன்எஸ் விக்ராந்தால் கடல் எல்லைகளின் பாதுகாப்பு வலுவாக உள்ளது எனத் தெரிவித்தார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் இருக்கும் வரை யாரும் இந்தியாவை அசைத்துக் கூட பார்க்க முடியாது எனவும் கூறினார்.
விக்ராந்த் என்றால் அடங்காத துணிச்சல், வெல்ல முடியாத சக்தி என்ற பொருள்படும் எனக் கூறிய அவர், கடற்படையினரின் கண்களில் உள்ள உறுதிப்பாடு இந்தியாவின் சக்தியைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
 
			 
                    















