டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தித்துப் பேசினார்.
அவரை பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும் ஜெ.பி.நட்டா வரவேற்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பற்றிய புத்தகத்தையும், நினைவுப் பரிசையும் நியூசிலாந்து துணைப் பிரதமருக்கு ஜெ.பி.நட்டா அளித்தார்.
இதையடுத்து இரு நாடுகளைச் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.