ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆகியோர் தலைமையில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.
இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்ததைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தேசியக் கொடியைக் கையில் ஏந்திய படி, நாட்டிற்கு ஆதரவாகவும், ராணுவத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.