வெற்றிக்காக மட்டுமல்ல, விடாமுயற்சி மற்றும் தீவிர அர்ப்பணிப்புக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர் தமிழ்மகள் வித்யா ராம்ராஜ் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், காலில் வீக்கம் இருந்தபோதும், தளர்வுராது மனதிடத்துடன் பங்கேற்று 400மீ தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது பெரும் சாதனையே என அவர் கூறியுள்ளார்.
எத்தகைய தடைகள் வந்தாலும், தான் எடுத்துக் கொண்ட பணியில் அர்ப்பணிப்புடன் பங்கேற்று, தேசியக்கொடியின் பெருமையை உயர்த்திப் பிடித்து இன்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழும் வித்யா ராம்ராஜூக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.