சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காடில் செயல்பட்டுவரும் கடற்பாசி வேதியியல் தொழிற்சாலையில் கழிவுகளைத் தீயிட்டு எரித்ததால் நச்சுப் புகை வெளியேறி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது.
கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படும் நிலையில் அங்கிருந்து நச்சு புகை வெளியேறி சிப்காட் முழுவதும் பரவியதுடன் அருகில் உள்ள சூரக்குளம், பில்லத்தான்,மேல்க்கொன்னக்குளம், செய்களத்தூர், உள்ளிட்ட கிராமங்களுக்கும் பரவி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் பொறுப்பின்றி செயல்பட்ட ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது.