ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல்மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கந்தசாமி பாளையத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான சடையப்ப சுவாமி கோயில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மூலவர் சன்னதி முன்பு உள்ள கல் மண்டபத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கல் மண்டபம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















