சென்னை திருவொற்றியூர் அருகே சுரங்கப்பாதை பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பள்ளி மாணவர்கள் சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே 20க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சுரங்கப்பாதையை அடைத்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் ஆபத்தான முறையில் சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து மறுபுறத்திற்குச் சென்று வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.