மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய வைகாசி வசந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவை ஒட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல அலங்காரங்கத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புது மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து மீண்டும் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
















