அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கோபிலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியை வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல், திப்ருகர் மாவட்டத்தில் புர்ஹி திஹிங் ஆற்றில் அபாய கட்டத்தைக் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.