இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் அண்ணாலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அவர் அனைத்து வளமும் நலமும் பெற்று, மக்கள் பணியில் சிறந்து விளங்கி, மேன்மேலும் பல உயரங்களை அடைந்து, பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளர்.