இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் பணிகளை தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்த, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் அண்ணாமலைக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தங்களின் அரசியல் மற்றும் சமுதாயப் பணிகள் மென்மேலும் தொடர்ந்திடவும், நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.