18 ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரு சாம்பியன்!
Sep 8, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

18 ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரு சாம்பியன்!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

18 வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி; இதுகுறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்..!

கிரிக்கெட் ரசிகர்களிடம் இந்த வருடத்தின் லக்கி நம்பர் என்னவென்று கேட்டால் நிச்சயம் 18 ஐ தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? விராட் கோலியின் கண்ணீரில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் இந்த 18 வருடங்களின் காத்திருப்பு எத்தகைய வலியை கொடுத்திருக்கும் என்று..!

விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18, ஆர் சி பியின் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் 18, இதுவரை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் பெற்ற வெற்றிகள் 18 என 18 ஆம் நம்பரை மறந்துவிட முடியாது.

உலகிலேயே லாயல் fan பேஸ் கொண்ட மிகச்சிறந்த அணியாக வலம்வரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தங்களது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

பஞ்சாப் உடனான இறுதிப் போட்டியில் 6 ரன்கள் விதியசத்தில் வெற்றி பெற்று, 18 வருடங்கள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களூர் அணி. வெற்றிக்கு பிறகு பேசிய விராட் கோலியிடம் இந்த தருணத்தை எப்படி உணருகிறீர்கள் என கேட்ட போது “18 வருஷங்களாக இந்த அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். இந்த தருணத்தை விவரிக்க முடியாது” என்று கூறினார்.

வெற்றி பெறுவதற்கு முன்பாகவே மைதானத்தில் கண் கலங்கியபடி பீல்டிங்  செய்த விராட் கோலியை ஒவ்வொரு பந்திற்கு மத்தியிலும் ரசிகர்கள் உற்சாகப் படுத்தினர். அணி வெற்றி பெற்றவுடன் மைதானத்திலேயே அவர் மண்டியிட்டு அமர்ந்து உடைந்து அழத் தொடங்கினார்.

மனைவி அனுஷ்கா, முன்னாள் வீரர்கள் AB டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், மென்டார் தினேஷ் கார்த்திக் என ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ரசிகர்களும் பட்டாசுகள் வெடித்தும் ஆர்ப்பரித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய உணர்வுபூர்வமான தருணங்களும், கொண்டாட்டங்களும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் களம் கண்ட ஆர்சிபி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, 2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.  2016 இல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இறுதிப் போட்டியில் 8 ரன்கள் விதியசத்தில் தோல்வி அடைந்தது.

2016ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டுதான் இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை பெற்றது பெங்களூரு அணி. இந்த வாய்ப்பை கணக்கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட RCB நல்ல பவுலிங் லைனப், குட் பேட்டிங் எபிலிட்டி என அனைத்திலும் அசத்தியது.

அணியை இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக வழிநடத்திய ரஜத் படிதார், பெங்களூர் ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் தன் வசம் இழுத்து விட்டார்.

கடந்த வருடம் womens premier league தொடரில் பெங்களூரு அணி கோப்பை வென்று அசத்தியது, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர் சி பி கோப்பையை வென்று வரலாறு எழுதி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் “ஈ சாலா கப் நமதே” என்ற நம்பிக்கையுடன் ஆர்.சி.பி. அணி களமிறங்கும். ரசிகர்களும் அதே நம்பிக்கையுடன்தான் இருப்பார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை பெங்களூரு அணியால் கோப்பையை தனதாக்க முடியாமல் போனது. ஆனால், 18 வருட காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஆர்சிபி, இந்த முறை ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கிவிட்டது. தொடக்கத்திலேயே கூறியதுபோல ஆர்சிபி வீரர்களும், ரசிகர்களும் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா முழுவதும் தற்போதைக்கு ஒலிப்பது ஒற்றை வார்த்தைதான். அது, “ஈ சாலா கப்பு நம்து”

Tags: IPL 2025.Bengaluru champions after 18 yearsபெங்களூரு சாம்பியன்
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவி : அதிமுக வேட்பாளர்களின் மனுவில் கையொப்பமிட்ட எம்எல்ஏக்கள்!

Next Post

கோவை : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

Related News

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies