தி.நகர் போன்ற மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.O தொடக்க விழா நடைபெற்றது.
ரிப்பன் மாளிகையில் நடந்த தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, குடிசை பகுதிகளில் கூடுதல் கழிப்பறைகளை அமைத்துத் தர மாநகராட்சி தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பொது இடங்களில் சிறுநீர் கழிக்காமல், மாநகராட்சி சார்பில் செயல்பாட்டில் உள்ள இலவச கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், இலவச கழிப்பறைகள் பொதுமக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மேயர் பிரியா கேட்டுக்கொண்டார்.
















