மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
கன்சோலி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கம்போல பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதிகாலை அங்கிருந்த 2 பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. இது குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர்.