திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு தொடர நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறு கருத்து பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணையானது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம், சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், வரும் 7ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக சீமான், வருண்குமார் ஆகியோர் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தார்.