பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யக் கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விழாவின்போது ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகவும், எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கர்நாடக அரசு விளக்கம் அளித்தது.
மேலும், வெற்றி விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் இரண்டரை லட்சம் பேர் மைதானத்தில் திரண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.