வர்த்தக போருக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது சமீபத்தில் ஒப்புக்கொண்ட சில வர்த்தக ஒப்பந்தத்தை பற்றி இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடல் நீடித்ததாகவும், நேர்மறையான கருத்து பரிமாற்றங்களுடன் உரையாடல் நிறைவு பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக போர் தொடங்கிய பிறகு இருவரும் உரையாடிக் கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.