திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழாவை ஒட்டி தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிலக்கோட்டையை அடுத்த ஊத்துப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான கருப்பணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். மேலும் பூசாரியிடம் ஏராளமான பக்தர்கள் சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.