ஹீரோ நிறுவனத்தில் XOOM 160 இருசக்கர வாகனத்தின் விற்பனை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகன பிரியர்களின் பெரும் எதிர் பார்ப்புக்கிடையே XOOM 160 இருசக்கர வாகனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் விற்பனை ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் XOOM 160 இருசக்கர வாகனத்தின் விற்பனை தொடங்கும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.