கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது அதே கூட்டணியில் உருவான சர்தார் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக, படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.