நெல்லையில் பழைய மரப் பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
நெல்லை மாவட்டம் அருகன்குளம் பகுதியில் முத்து என்பவருக்குச் சொந்தமான பழைய மரப் பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு மரப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மரக்கட்டைகள் மற்றும் பழைய மரப் பொருட்களுக்கு தீ மளமளவெனப் பரவிப் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாக்கின. மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.