சேலம் சுகவனேஸ்வரர் கோயில் வைகாசி தேரோட்டத்தின்போது தேர் திடீரென நகர்ந்ததையடுத்து அமைச்சர் ராஜேந்திரன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத்தை அமைச்சர் ராஜேந்திரன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் தேருக்கு அருகே வந்த நிலையில், தேருக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. பின்னர், தேரானது தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டபோது திடீரென முன்னால் நகர்ந்தது.
இதனால் அமைச்சர் ராஜேந்திரன் அச்சமடைந்த நிலையில் அரை அடி தூரத்தில் தேர் நின்றது. இதனால் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.