நாட்டில் அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்காக இளம் விஞ்ஞானிகளின் மாநாடு நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் ஜுன் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய அறிவியல் இயக்கவியல் குறித்து இளம் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.