வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் - சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!
Mar 20, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் – சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. மனித விலங்கு மோதலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் உணவுத் தட்டுப்பாடு குறித்தும், அதற்கான காரணங்கள் பற்றியும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழும் நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதி யானை, கரடி, சிறுத்தை, புலி, மான் என ஏராளமான வனவிலங்குகளின் வாழ்விடமாக விளங்கிவருகிறது.

அத்தகைய வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் போதிய உணவின்மை காரணமாக ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி வரும் கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

உணவு தேடி ஊருக்குள் புகும் கரடிகள், ஹோம் மேட் சாக்லெட் தொழிற்சாலை, பேக்கரி, தேயிலைத் தோட்டங்கள் மட்டுமல்லாது கோயிலில் உள்ள பிரசாதங்களையும் உண்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகக் கரடிகள் ஊருக்குள் வருவது தொடர்பாக ஆவணக் காப்பகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடே கரடிகள் ஊருக்குள் நுழைய முக்கிய காரணம் எனக் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் பழ மரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதும், தேன்களை விற்பனைக்காக மக்கள் எடுத்துச் செல்வதும் கரடிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட மற்றொரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. மனித விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்க ஆவண காப்பகத்தினர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்

வீடுகளில் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் வனப்பகுதியின் எல்லையோரத்தில் கொட்டப்படுவதும் கரடிகள் ஊருக்குள் வருவதற்குக் காரணமாகவும் கூறப்படுகிறது. மனித விலங்கு மோதல்கள் அதிகரிக்கும் முன்பாகவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனத்துறை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: விவசாயிகள் வேதனைFood shortage in the forest: Bears entering the village - Farmers suffering due to damaged cropsஊருக்குள் புகும் கரடிகள்
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து : இந்தியாவின் பிரம்மாஸ்திரம் – பாலைவனமாகும் பாகிஸ்தான்!

Next Post

கலவர பூமியான கேளிக்கை நகரம் : அதிபர் ட்ரம்ப் உடன் மோதும் கலிஃபோர்னியா ஆளுநர்!

Related News

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies