மூடா ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் இழப்பீடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகக் கடந்தாண்டு புகார் எழுந்தது.
இது தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மூடா ஊழல் வழக்கு தொடர்பாக சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
















