ஆக்கிரமிப்பு அகற்றம் : பாம்பு, தேள்களுடன் வாழ்க்கை - அகதிகளான மக்கள்!
Sep 18, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றம் : பாம்பு, தேள்களுடன் வாழ்க்கை – அகதிகளான மக்கள்!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆக்கிரமிப்பு எனக்கூறி அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத பெரும்பாக்கத்திற்கு வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்திருப்பதாகத் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது. ரேசன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு என எந்தவசதியுமின்றி அகதிகளாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களின் சுப காரியங்கள், முக்கிய நிகழ்வுகள், எதிர்கால திட்டங்கள் என ஒவ்வொன்றிருக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்த மக்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையைக் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூரை அடுத்த சாந்தி காலனி, தாய் மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர் மற்றும் காயிதே மில்லத் நகர் என பல்வேறு பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல நூறு குடியிருப்புகள் முறையான முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டன.

வீட்டு வரி, மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான வரிகளையும், கட்டணங்களையும் செலுத்தி வந்த மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மாற்று ஏற்பாடுகள் எனும் பெயரில் நீண்ட தூரத்திற்கு அப்பால் உள்ள தைலாவரம், பெரும்பாக்கம், கீரப்பாக்கம் பகுதிகளில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அப்படி ஒதுக்கப்பட்ட வீடுகளோ, பேருந்து வசதி, பள்ளி, கல்லூரி வசதி என எந்தவித வசதிகளும் இல்லாத தனித்தீவாகக் காட்சியளிக்கிறது

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ரேசன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு, மருத்துவமனை வசதி என எந்தவித வசதிகளும் இல்லாத இடத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருப்பது, ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்வதைப் போல் இருப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்று ஏற்பாடுகள் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட பத்து மாடி குடியிருப்பின் பல பகுதிகள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.  வீடுகளை இடித்ததற்கான காரணத்தைக் கேட்டால் தங்களைக் கைது செய்வதையும், குரல்வளையை நசுக்குவதையுமே காவல்துறை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு எனக்கூறி சாதாரண மழை பெய்தாலே தாங்காத பெரும்பாக்கத்திற்கு  மாற்றியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியது தான் என்றாலும் காலம் காலமாக அங்கிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளோடு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

Tags: பாம்புLiving with snakes and scorpions: Removal as occupation - People who become refugeesஅகதிகளான மக்கள்ஆக்கிரமிப்பு என அகற்றம்தேள்
ShareTweetSendShare
Previous Post

தேனிலவு கொலையில் துப்பு துலங்கியது எப்படி? : சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்!

Next Post

ஆபரேஷன் சிந்துார் – சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடிய பாகிஸ்தான்!

Related News

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை : கைவிட தமிழக அரசு முடிவு!

பிரதமர் மோடியை வாழ்த்தி AI வீடியோ!

புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

ஜேசிபி உதவியுடன் சமைக்கப்பட்ட தால் மக்கானி!

ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

ஏழை மக்களுக்காக அன்னதான திட்டத்தை தொடங்கிய லாரன்ஸ்!

இட்லி கடை படத்தின் ’என் பாட்டன் சாமி’ பாடல் வெளியீடு!

தெலங்கானா : கவிழ்ந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி!

வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க பணியாற்றுவேன் : பிரதமர் மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் : தேர்தல் ஆணையம்

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies