வியட்நாமில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
ஃபு தோ மாகாணத்தில் உள்ள ஃபோங் சா பகுதியில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பாலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது பாலத்தில் வந்த சிலர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.