குமரபாளையம் அருகே சலூன் கடையில் வடமாநில தொழிலாளரை இருபதுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வட்டமலை பகுதியில் உள்ள சலூன் கடையில் பஞ்சாப்பைச் சேர்ந்த சர்வேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். சலூன் கடைக்கு வந்த இளைஞருக்கு சர்வேஷ் முடித்திருத்தம் செய்தபோது, சரியாக முடி வெட்டவில்லை எனக்கூறி இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை கடைக்காரர் சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இந்நிலையில், கோபமடைந்த இளைஞர் ஆட்களுடன் வந்து சலூன் கடையில் இருந்த வடமாநில இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் சலூன் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.