கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் - சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் – சிறப்பு தொகுப்பு

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது காணலாம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வியாழக் கிழமை 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், புறப்பட்ட 5 நிமிடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் இருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது கடும் மழை மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக ஓடுபாதையை தாண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு மே 22-ம் தேதி, 166 பயணிகளுடன் துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 737-800 விமானம், தரையிறங்க முயன்றபோது சரியான இடத்தில் நிற்க முடியாமல் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதேபோல, கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி 55 பேருடன் பீகார் மாநிலம் பாட்னாவில் தரையிறங்க முற்பட்ட அலையன்ஸ் ஏர் பிளையிட் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தின் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தரையில் இருந்த 5 பேர் உட்பட 60 பேர் பலியாகினர்.

கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரி பகுதியில், சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் 763 விமானம் மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் 1907 விமானம் ஆகியவை தொடர்பு கோளாறு மற்றும் உயர அறிவுறுத்தல்களை மீறியதால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு விமானங்களிலும் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 349 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி, 118 பேருடன் மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-2A8 விமானம், எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் நுழைந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தால் தீப்பிடித்து எரிந்த விமானத்தில் சிக்கி 55 பேர் இறந்த நிலையில், மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

கடந்த 1990-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, 146 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தரையிறங்க முயன்ற இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானம், முன்கூட்டியே தரையிறங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 92 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி, 135 பேருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், தரையிறங்க முற்பட்டபோது போதிய வெளிச்சமின்மையால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இதேபோல, கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 213 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்ப முற்பட்டு இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அரபிக்கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.

Tags: BJ Medical College hostel buildingplane crashes in indiaenglandgujaratAhmedabadplanecrashgatwickBoeing AI-171Ahmedabad airport
ShareTweetSendShare
Previous Post

Good bye india – விபத்திற்கு முன் வீடியோ வெளியிட்ட இங்கிலாந்தை சேர்ந்த இருவர்!

Next Post

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா – அசிம் முனீருக்கு அழைப்பு!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies