அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே விமானிகள் பயன்படுத்தும் மேடே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை தற்போது காணலாம்.
விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே மேடே என்ற வார்த்தையை உச்சரிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்பு என்றும்,
விமானி ஒருவர் ‘மேடே’ என்று உச்சரிக்கும்போது அது மிகவும் தீவிரமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது.
விமானி மேடே என்று உச்சரித்தால் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக அந்த அழைப்பிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேடே என்ற வார்த்தை வேறு எந்த உரையாடல்களுடன் கலக்காத வகையில் தெளிவான அவசரகால செய்தியை வழங்குகிறது எனவும் சொல்லப்படுகிறது.
பிரெஞ்சு சொற்றொடரில் இருந்து வந்த மேடே என்ற வார்த்தை “எனக்கு உதவுங்கள்” என்பது அர்த்தமாகும். 1920ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மேடே என்ற சொல், விமான போக்குவரத்தில் ஒரு நிலையான நெறிமுறையாக உள்ளது என்றும், மேலும், தெளிவாக புரிந்து கொள்ளப்படுவதை உறுதி செய்ய மேடே அழைப்பு தொடர்ச்சியாக 3 முறை கூறப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.