இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மே மாதத்தில் மட்டும் உள்நாட்டு விற்பனை 2 லட்சத்து 25 ஆயிரத்து 733 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.