குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் லாரியில் மறைத்துக் கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 ஆயிரத்து 696 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மோர்பி நகரில் ராஜ்காட் நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது நிலக்கரிக்கு அடியில் மறைத்து 6 ஆயிரத்து 696 மதுபான பாட்டில்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பறிமுதல் செய்த மதுபானங்களின் மதிப்பு 89 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்துள்ளனர்.