கடலூரில் ஏசியில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பு லாவகமாகப் பிடிக்கப்பட்டு காப்புக்காட்டில் விடப்பட்டது.
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் வீட்டில், படுக்கை அறையில் உள்ள ஏசியில் அவ்வப்போது ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து ஏசியை வீட்டின் உரிமையாளர் உற்றுப் பார்த்தபோது அதில் இரண்டரை அடி நீள சாரைப்பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாம்பு பிடி வீரர் மூலம், சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டு, காப்புக்காட்டில் விடப்பட்டது.