தொண்டர்கள் கொடுத்த வாளை வாங்க மறுத்த கமல்ஹாசன், அவர்கள் கடிந்து கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
திமுக கூட்டணியில் மாநிலங்களவை எம்பியாக தேர்வாகி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தொண்டர்கள் சிலர், வாள் ஒன்றைப் பரிசளித்தனர்.
அதனை வாங்க மறுத்த கமல்ஹாசன், மேஜையில் வைத்துச் செல்லுங்கள் என்று ஆக்ரோஷமாகக் கூறியது இணையத்தில் வைரலாகி உள்ளது.